states

img

தலித் மணமகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து தாக்குதல்.... ம.பி. மாநிலத்தில் அரங்கேறிய சாதிய வன்கொடுமை....

இந்தூர்:
தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து, சாதி ஆதிக்கக் கூட்டம் தாக்குதல் நடத்திய சம்பவம், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் இந் தூர் மாவட்டத்தில் உள்ள மான்பூர் பகுதியில் உள்ள கோயிலுக்குள் தலித் மணமகன் ஒருவர், தனதுதிருமணத்தையொட்டி வழிபாட்டிற் குச் சென்றுள்ளார். ஆனால், அந்தஇளைஞரை, கோயிலுக்கு உள்ளேயே நுழைய விடாமல், அந்தஊரின் சாதியாதிக்க வெறிக்கும்பல் தகராறு செய்துள்ளது. ஒருகட்டத் தில், தலித் மணமகன் மற்றும் அவருடன் வந்திருந்த உறவினர்கள் மீது கொடூரமான தாக்குதலை அரங்கேற்றி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மணமகனின் தந்தை மான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில்4 பேரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 341, 323, 506, 153-A,295-A மற்றும் 147 கீழ் வழக்கும் பதிவுசெய்தனர்.பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மண விழா மற்றும் பூஜைகள்கோயிலில் நடைபெற்று முடிந்துள் ளது.இதனிடையே, மண விழாவில் கலந்து கொண்ட நபர்கள் மதுஅருந்தி இருந்ததாகவும், அதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த ஊரின் சாதியாதிக்க கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சனையைதிசைதிருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

;